சந்திரபாபு நாயுடுவிற்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

1062பார்த்தது
சந்திரபாபு நாயுடுவிற்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து!
ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவிற்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஆந்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு வாழ்த்துகள். உங்கள் தொலைநோக்கு தலைமையின் கீழ் ஆந்திர மக்கள் பெரும் முன்னேற்றம் அடைய வாழ்த்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி