திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தியதில் திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தின் பங்கு மகத்தான தாக விளங்கியது மேலும் இந்தியாவின் சிறந்த கூட்டுறவு சங்கமாகவும் அங்கத்தினர்களின் அமுத சுரபியாக திகோ சில்க்ஸ் நிறுவனம் இருந்து வந்தது.
இந்நிலையில் அச்சங்கத்தின் விற்பனை குறைவு, புடவைகள் இருப்பு தேக்கம், நிர்வாக சீர்கேடு அங்கத்தினருக்கு வேலையின்மை போன்ற காரணங்களால் மிகவும் நலிவடைந்து வருகிறது. இக்குறைகளை போக்கவும் சங்கத்தை பாதுகாத்திடவுமம் திகோசில்ஸ் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டு அதன் மூலமாக கைத்தறித்துறை அமைச்சர் அதிகாரிகளை நேரில் சந்தித்து திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்திற்கு தனி பொறுப்புடன் மேலாண்மை இயக்குனர் நியமனம் செய்ய வேண்டும்,
தேங்கியுள்ள பட்டுப் புடவைகளுக்கு நிபந்தனை இன்றி அரசு தள்ளுபடி வழங்க வேண்டும், ஆன்லைன் விற்பனை மூலமாகவும் நேரடி கிளைகள் திறந்தும் விற்பனை அதிகரித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், அங்கத்தினர்களை அலை கழிக்காமல் டிசைன் மாற்றம் செய்து தொடர்ந்து வேலை வாய்ப்பை வழங்கிட வேண்டும் என நேரில் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது ஆனால் சங்க நிர்வாகித்திடம் பலமுறை பேசியும் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.