லண்டனில் அரசியல் படிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில், "இந்திய அரசியலில் ஆம் ஆத்மி, திமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே வித்தியாசமான பாதையில் பயணிக்கின்றன. ஒரு நிரபராதியைக் கொண்டாடுவது போல, செந்தில் பாலாஜியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டாடுகிறார். பிணையில் வெளியே வந்திருக்கும் ஒருவரை, திமுக காந்தியவாதியைப் போல கொண்டாடுகிறது" என்று தாக்கி பேசியுள்ளார்.