இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்தநிலையில், தற்போது அதனை ஹர்பஜன் சிங் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'எனது வாழ்க்கையில் இருந்து இரண்டு மூன்று நல்ல விஷயங்களை இந்த உலகத்திற்கு காண்பிக்க விரும்புகிறேன். விரைவில் அது குறித்து அறிவிப்பேன். அதன்படி, வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால் எனது கதாபாத்திரத்தில் நடிக்க விக்கி கவுசல் சரியாக இருப்பார் என்று நினைக்கிறேன்' என்றார்.