டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியின் 4-வது இன்னிங்ஸில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 1625 ரன்களை அடித்திருந்த நிலையில், தற்போது ஜோ ரூட் 1630 ரன்களை அடித்ததன் மூலம் அச்சாதனையை முறியடித்துள்ளார். இப்பட்டியலில் தற்போது ஜோ ரூட் (1630) முதலிடத்திலும், சச்சின் டெண்டுல்கர் (1625) இரண்டாவது இடத்திலும், அலெஸ்டர் குக் / கிரேம் ஸ்மித் (1611) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.