கும்பகோணம் வழியாக வந்தே பாரத் ரெயில் இயக்க கோரிக்கை

78பார்த்தது
கும்பகோணம் வழியாக வந்தே பாரத் ரெயில் இயக்க கோரிக்கை
தஞ்சை - விழுப்புரம் இடையேயான ரெயில் பாதை மிகவும் பழமையானது.

இப்பாதையில் தஞ்சாவூர் கும்பகோணம் மயிலாடுதுறை சீர்காழி சிதம்பரம் கடலூர் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்கள் அமைந்துள்ளது.

தஞ்சாவூர்-விழுப்புரம் இடையே ஒற்றை வழி ரெயில் பாதை அமைந்துள்ளதால் இப்பாதையில் ரெயில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

தஞ்சையில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் சோழன் விரைவு வண்டி மட்டுமே இரு மார்க்கங்களிலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் பயணிகள் பயன்பாடு சுமார் 150 சதவீதத்திற்கு மேல் உள்ளதால் எப்பொழுதும் கூட்டம் நிரம்பி வழியும். வார இறுதி நாட்களிலும் பண்டிகை காலங்களிலும் இடைப்பட்ட ரெயில் நிலையங்களில் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இடம் கிடைப்பது அரிதாக இருக்கும். தஞ்சையில் இருந்து விழுப்புரம் வரை பகல் நேரத்தில் தினசரி இயங்கும் ஒரே வண்டி என்பதால் இடைப்பட்ட ரெயில் நிலையங்களுக்கு செல்லவும் பயணிகள் இந்த ரெயிலேயே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். எனவே தஞ்சாவூர் சென்னை இடையே பகல் நேர இன்டர்சிட்டி விரைவு ரெயில் இயக்கப்பட வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கமும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி