தஞ்சை: கிராம சபை கூட்டத்தில் ஆக்கிரமிப்புகளை எடுக்க கோரி மனு

82பார்த்தது
தஞ்சை: கிராம சபை கூட்டத்தில் ஆக்கிரமிப்புகளை எடுக்க கோரி மனு
திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் சூரியனார் கோவில் ஊராட்சி வடக்கு தெருவில் உள்ள ஆச்சா குளத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டப்பட்டுள்ளது. திருவிடைமருதூர் வட்டாட்சியர் அவர்களால் அளவீடு செய்யப்பட்டு பல மாதங்களாக ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் உள்ளதை சுட்டிக்காட்டி இன்று உலக தண்ணீர் தின சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு உடனடியாக அகற்ற வேண்டியும் நீர்நிலையை பாதுகாக்க வேண்டியும் தண்ணீர் தின கிராம சபை கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி