வயலில் அனுமதியின்றி போடப்பட்ட குழாயை அகற்ற புகார் மனு

64பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா விட்டலூர் ஊராட்சியில் தனியார் நெல்வயலில் கூட்டு குடிநீர் குழாயை அனுமதியின்றி பதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயி கோட்டாட்சியரிடம் வியாழக்கிழமை புகார் செய்தார்.

திருநாகேஸ்வரம் மேலததெருவைச் சேர்ந்த விவசாயி எஸ். நாகராஜன் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியரிடம் வியாழக்கிழமை நேரில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா விட்டலூர் ஊராட்சியில் பட்டா எண் 1317 நெல்வயலில் தமிழ்நாடு கூட்டு குடிநீர் வடிகால் வாரியத்தினர் எவ்வித அனுமதியின்றி 10 அடி ஆழம், 250 அடி நீளத்தில் சுமார் 2 அடி விட்டமுள்ள இரும்பு குழாயை பதித்துள்ளனர்.

மற்ற இடங்களில் நெடுஞ்சாலையில் குழாயை பதித்துள்ளனர், இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது, கோ்டடாட்சியர் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, இடத்தை ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

தொடர்புடைய செய்தி