திருப்பனந்தாளில் அதிமுக வேட்பாளர் பாபு வாக்கு சேகரிப்பு

50பார்த்தது
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பாபு தீவிர வாக்கு சேகரிப்பு


தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, திருப்பனந்தாள் ஒன்றித்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில்
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பாபு பரப்புரை மேற்கொண்டார். அவருக்கு ஆதரவாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தஞ்சை கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர். கே. பாரதிமோகன் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து இடையாநல்லூரில் அதிமுக வீரா. கலியமூர்த்தி இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை ஆசீர்வதித்தார். பிறகு மணமக்களுடன் மதிய உணவருந்தி வாக்கு சேகரித்தார். இதில் அதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி