குட்டியானையின் பாசப்போராட்டம் முடிவுக்கு வந்தது!

81பார்த்தது
வனத்துறையினரின் தொடர் சிகிச்சையால் தாய் யானையின் உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. கோவை மருதமலை வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய தாய் யானையிடம் பால் குடிக்க முடியாமல் 4 மாத குட்டி யானை தவித்து வந்தது. இந்நிலையில், கிரேன் மூலம் தாய் யானை தூக்கி நிறுத்தப்பட்டு நோய் எதிர்ப்பு மருந்துகள் அளித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, தாய் யானை குட்டியானைக்கு பாலூட்டியது. இந்த வீடியோ, இணையவாசிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி: நியூஸ் 18.

தொடர்புடைய செய்தி