குரூப்- 4 தேர்வு- சிறப்புப் பேருந்து இயக்க அறிவுறுத்தல்!

79பார்த்தது
குரூப்- 4 தேர்வு- சிறப்புப் பேருந்து இயக்க அறிவுறுத்தல்!
மதுரையில் குரூப்- 4 தேர்வு நடக்கும் நாளில் சிறப்புப் பேருந்துகள் இயக்க மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் இளநிலை உதவியாளர், விஏஒ உள்பட 6244 பணியிடங்களுக்கு குரூப்- 4 தேர்வு ஜூன் 9-ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்வில் பங்கேற்போரின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்தி