மார்பிங் புகைப்படம்.. நீதிபதி அதிரடி உத்தரவு

52பார்த்தது
மார்பிங் புகைப்படம்.. நீதிபதி அதிரடி உத்தரவு
பெண்களின் புகைப்படங்களை அவதூறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதால் குறிப்பிட்ட பெண்ணுக்கு மட்டுமல்லாமல் பெண் சமூகத்திற்கே பாதிப்பு ஏற்படுகிறது. இது போன்ற குற்றங்களை சாதாரண குற்றமாக பார்க்க முடியாது. சமூக வலைதளங்களை பயன்படுத்தும் இளைஞர்களும் இது போன்ற செயல்களால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பெண்ணின் புகைப்படத்தை அவதூறாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட வழக்கில் தென்காசியை சேர்ந்த காஜா என்பவர் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க மறுத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி