தீர்த்தகிரி கவுண்டர் தீரன் சின்னமலை ஆனது எப்படி தெரியுமா?

54பார்த்தது
தீர்த்தகிரி கவுண்டர் தீரன் சின்னமலை ஆனது எப்படி தெரியுமா?
தீர்த்தகிரி கவுண்டர் அவர்களின் பிறப்பிடமான கொங்கு நாடு மைசூர் மன்னர் ஆட்சியில் இருந்ததால், அந்நாட்டின் வரிப்பணம், அவரது அண்டைய நாடான சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு எடுத்து செல்லப்படும். ஒருநாள் தனது நண்பர்களுடன் வேட்டைக்கு சென்ற தீர்த்தகிரி, அந்த வரிப்பணத்தை பிடுங்கி, ஏழை, எளிய மக்களுக்கு வினியோகம் செய்தார். இதை தடுத்த தண்டல்காரர்கள் கேட்ட போது, "சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாக மைசூர் மன்னர் ஐதர் அலியிடம் சொல்" என்று சொல்லி அனுப்பினார். அன்று முதல், அவர் 'தீரன் சின்னமலை' என்று அழைக்கப் பட்டார்.

தொடர்புடைய செய்தி