யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை இல்லை

77பார்த்தது
யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை இல்லை
யூடியூபர் இர்ஃபான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை வெளிப்படையாக தன்னுடைய யூடியூப் சேனலில், குழந்தை பிறப்பதற்கு முன்பே வெளியிட்டார். இந்தியாவைப் பொறுத்தவரை குழந்தை பிறப்பதற்கு முன்பே அந்த குழந்தையின் பாலினத்தை கூறுவது சட்டப்படி தவறாகும். இதையடுத்து, அவர் விளக்கம் அளிக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், சுகாதாரத்துறைக்கு இர்ஃபான் அளித்த விளக்கம் திருப்தி அளிப்பதாக இருப்பதால், அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி