அமேதி தொகுதியில் போட்டியிடுவாரா ராகுல் காந்தி..?

62பார்த்தது
அமேதி தொகுதியில் போட்டியிடுவாரா ராகுல் காந்தி..?
மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றார். காங்கிரஸ் தலைவர் என்ன கேட்டாலும் நான் செய்வேன். அனைத்து முடிவுகளும் கட்சி உயர்மட்டக்குழுவால் எடுக்கப்படுகின்றன. கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றார். அமேதி நிலை குறித்து விரைவில் தெளிவுபடுத்துவேன் என்றும் ராகுல் சூசகமாக தெரிவித்தார். கடந்த முறை அமேதி மற்றும் வயநாட்டில் ராகுல் போட்டியிட்ட நிலையில், இந்த முறை வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிடுகிறார். அமேதி பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

தொடர்புடைய செய்தி