திருவையாறு: தந்தையை வெட்டிவிட்டு தற்கொலைக்கு முயன்றவர் உயிரிழப்பு

80பார்த்தது
திருவையாறு: தந்தையை வெட்டிவிட்டு தற்கொலைக்கு முயன்றவர் உயிரிழப்பு
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மேலபுனவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (55). இவரது மூத்த மகனும் திருவையாறு தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரருமான விக்னேஷ் (29), தனது தந்தை சேகரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் பயனில்லை. 

இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் தனது தந்தை சேகரை வியாழக்கிழமை இரவு அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த சேகர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் மனமுடைந்திருந்த விக்னேஷ் வீட்டுக்குள் சென்று பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக் கொண்டதில் பலத்த காயமடைந்தார். 

இதையடுத்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து மருவூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி