திருக்காட்டுப்பள்ளி அருகே கூத்தார் புது காலனி
தெருவை சேர்ந்தவர் பெரியசாமி மகன் பழனி வேல்(47). பேரூராட்சி அலுவலக செக்யூரிட்டியாக 12 ஆண்டாக பணிபுரிந்து வந்தார். நேற்று மதியம் வீட்டின் மேல் மழை பெய்யாமல் இருக்க படுதா போட்டு மூடும் போது, வீட்டின் மேல் பகுதியில் சென்ற எர்த் கம்பியில் கை பட்டு மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார்.
அக்கம்பக்கத்தினர்
மீட்டு அவரை திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் திருக்காட்டுப்பள்ளி சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.