பள்ளியில் பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

69பார்த்தது
பள்ளியில் பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
செங்கிப்பட்டி அரசு பள்ளியில் பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மத்திய அரசின் திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி செங்கிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் வழிகாட்டுதலின்படி அனைத்து உட்கோட்டத்திலும் ஒரத்தநாடு உதவி காவல் கண்காணிப்பாளர் சஹானா , மாவட்ட குற்றப்பதிவேடு காவல் துணை கண்காணிப்பாளர் திவ்யா, திருவையாறு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அருள்மொழி அரசு, மருத்துவக் கல்லூரி காவல் ஆய்வாளர் சந்திரா மேற்பார்வையில் நேற்று செங்கிப்பட்டி காவல் சரகம் அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதில் குழந்தைகளுக்கான குற்றங்கள், குழந்தைகளின் பாதுகாப்பு, குழத்தைகளின் பருவ வளர்ச்சி, மன நிலை மாற்றம், எதிர்கால குறிக்கோள், தற்காப்பு பயிற்சி, சைபர் கிரைம் குற்றங்கள், அனைத்து ஹெல்ப்லைன் நம்பர் பற்றி அறிவுறுத்தப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் மருத்துவர் ஆனந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ரஞ்சித் மற்றும் பூதலூர், திருவையாறு காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு அனைத்து குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு சம்பந்தமான புத்தகங்கள் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி