மாதிரி நீதிமன்றப் போட்டியில், தஞ்சாவூா் சாஸ்த்ரா வெற்றி

63பார்த்தது
மாதிரி நீதிமன்றப் போட்டியில், தஞ்சாவூா் சாஸ்த்ரா வெற்றி
சென்னை ஐஐடி-இல் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த 3 நாள் சுரானா அறிவுசார் சொத்துரிமை மாதிரி நீதிமன்றப் போட்டியில், தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் வெற்றி பெற்றது. சென்னை ஐஐடி-இல் எட்டாவது சுரானா அண்ட் சுரானா சார்பில் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான மாதிரி நீதிமன்றப் போட்டி ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. 

இதில், போபாலில் உள்ள தேசிய சட்டவியல் நிறுவன பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டவியல் பல்கலைக்கழகம், சாஸ்த்ரா சட்டவியல் பள்ளி உள்பட 16 பல்கலைக்கழகங்கள், தேசிய சட்டவியல் பள்ளிகள் கால் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. கால் இறுதியில் அலையன்ஸ் பல்கலைக்கழகத்தையும், அரை இறுதியில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டவியல் பல்கலைக்கழகத்தையும் சாஸ்த்ரா சட்டவியல் பள்ளி வென்றது. 

இறுதிப் போட்டியில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர். சுப்பிரமணியன், மூத்த வழக்குரைஞர் சதீஷ் பராசரன், எம். எஸ். பாரத் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். இதில், மங்களூரு எஸ். டி. எம். சட்டவியல் பள்ளியை சாஸ்த்ரா சட்டவியல் பள்ளி வெற்றி பெற்றது. சாஸ்த்ரா சட்டவியல் பள்ளி அணியில் சுவாமிநாதன், ஜெரின் மேத்யூ, ஹரிஹரன் ஆகியோர் இடம் பெற்றனர்.

தொடர்புடைய செய்தி