இந்தூரை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற மத்தியப்பிரதேச மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ.1000 வெகுமதி வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும், மக்கள் தங்கள் பகுதிகளில் பிச்சை கேட்கும் நபர்களைப் பற்றிய தகவல்களை வழங்க முன்வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.