தெலங்கானா: ஹைதராபாத்தில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததில் 3 பேர் உயிருடன் உடல் கருகி பலியான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாரங்கலில் இருந்து வந்த கார் ஒன்று காட்கேசர் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் கார் முழுவதும் எரிந்து நாசமான நிலையில், காரில் பயணம் செய்த 3 பேர் உடல் கருகி பலியாகினர். விபத்தில் உயிரிழந்தவர்கள் விவரம் இன்னும் தெரியவில்லை.