பிரியங்கா காந்தியின் கன்னங்களை போன்ற சாலைகளை அமைப்பேன் என்று பேசி சர்ச்சையை கிளப்பிய பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி, டெல்லி முதல்வர் அதிஷி தனது தந்தையையே மாற்றியவர் என்று மற்றொரு புயலை கிளப்பியுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அதிஷி, "தேர்தலுக்காக நீங்கள் இப்படி ஒரு கேவலமான செயலைச் செய்வீர்களா? இந்த நாட்டு அரசியல் தலைகீழாக மாறும் என்று நான் நினைக்கவில்லை" என்று கூறிய அவர் மனமுடைந்து அழுதார்.