தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு பெட்டி

70பார்த்தது
தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு பெட்டி
தேர்தல் நடத்தை விதிமுறைகள்
அமலுக்கு வந்திருப்பதால் தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பொது மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை போட்டுச் செல்கின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடை பெறுகிறது. இதில் தமிழகத்தில் முதல் கட்டமாக வரும் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்களில் வாரந் தோறும் திங்கட்கிழமைகளில் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டங்கள் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கலெக்டர் அலுவலகம் முன் ஒரு பெட்டி வைக்கப்பட்டு அதில் பொதுமக்கள் மனுக்களை அளிக்க வசதி செய்யப் பட்டுள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் கடந்த இரண்டு வாரமாக பொதுமக்கள் மனுக்களை இட்டுச் சென்றனர். திங்களன்று மாவட்டத்தின் பல்வேறு பகு திகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை பெட்டியில் இட்டு சென்று வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி