ராகிங்- பாலியல் துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

69பார்த்தது
ராகிங்- பாலியல் துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் ராகிங் மற்றும் பாலியல் துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ. மருதுபாண்டியன் வழிகாட்டுதலின்படி
நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மா. விஜயா
துணைமுதல்வர் தங்கராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிறப்பு விருந்தினராக ஒரத்தநாடு, காவல் ஆய்வாளர் சுதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
அவர் தம் உரையில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் பற்றியும், அதற்கான சட்டங்கள் மற்றும் தண்டனைகள் பற்றியும் விரிவாக மாணவ-
மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். கல்வி மட்டுமே வாழ்வின் உயர்வுக்கு வழிவகை செய்யும் எனவும் அறிவுரை வழங்கினார். முன்னதாக இயற்பியல்
துறைத்தலைவரும் ராகிங் ஒழிப்பு குழு தலைவருமான சரவணன்
வரவேற்றார்.
உதவி பேராசிரியர்
நேதாஜி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி
மேலாளர் இரா. கண்ணன் செய்திருந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி