நாளை உருவாகும் புதிய புயல் சின்னம்: வானிலை அலர்ட்!

50பார்த்தது
நாளை உருவாகும் புதிய புயல் சின்னம்: வானிலை அலர்ட்!
வங்கக்கடலில் நாளை (செப்., 05) உருவாகும் புதிய புயல் சின்னம் காரணமாக, தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மத்திய மேற்கு அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 5ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதனால் இன்று (செப்., 4) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி