தஞ்சாவூரில் தற்காலிக மீன் சந்தை திறப்பு

54பார்த்தது
தஞ்சாவூரில் தற்காலிக மீன் சந்தை திறப்பு
தஞ்சாவூர் கீழ அலங்கத்தில் 56 கடைகளுடன் கூடிய தற்காலிக மீன்சந்தை சனிக்கிழமை திறக்கப்பட்டது. தஞ்சாவூர் கீழவாசல் பகுதியுள்ள மீன் சந்தையில் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ அலங்கம் கொண்டிராஜபாளையம் ரவுன்டானா அருகே அகழிக்கரையில் தற்காலிக மீன் சந்தை சில ஆண்டுகளாகச் செயல்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால், அச்சாலையில் இரு சக்கர வாகனங்க ளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையோரத்தில் மீன் கழிவுகள் கொட்டப்படுவதால், ஏற்படும் துர்நாற்றத்தால் அப்பகுதி மக்களி டையே அதிருப்தி நிலவி வந்தது. இதனால், இந்த தற்காலிக மீன் சந்தையை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதை மாநகராட்சி நிர்வாகம் ஏற்று அருகே கீழ அலங்கத்தில் பீரங்கி மேடு எதிரே இருந்த காலி இடத்தில் தற்காலிக மீன் சந்தை அமைக்க நடவடிக்கை எடுத்தது. இதன் மூலம், தகரக் கொட்டகை, சிமென்ட் தளம் அமைக்கப்பட்டு, 56 கடைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. இந்த தற்காலிக மீன் சந்தையை மேயர் சண். ராமநாதன் சனிக்கிழமை திறந்து வைத்தார். மண்டலக் குழுத் தலைவர் எஸ். சி. மேத்தா, தி. புண்ணிய மூர்த்தி, ரம்யா சரவணன், மாமன்ற உறுப்பினர் ஏ. காந்திமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி