பேராவூரணி அருகே கரிசவயல் பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் மழைவேண்டி சிறப்பு தொழுகை மற்றும் பிரார்த்தனை செய்தனர். சிறப்பு தொழுகை நடத்திய மௌலானா மெளலவி நஸ்ருல்லாஹ் பைஜீ கூறுகையில், நபிகள் நாயகம் நாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்தி பிரார்த்தனை செய்யவேண்டும் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில் அனைத்து மக்களின் நல்வாழ்விற்காக மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது என்றார். இதில் கரிசவயல் ஜமாத்தார்கள் மற்றும் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.