ரூ.1 செலவில் 15 கி.மீ., பயணம்.. பள்ளி மாணவனின் முயற்சி

83பார்த்தது
சேலம் மாவட்டம் ராமநாயக்கன் பாளையத்தில் 10ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் அபிஷேக். இவர், சாதாரண சைக்கிளில் 30.கி.மீ., வேகத்திறன் கொண்ட பேட்டரியை பொருத்தி புதிய வகை சைக்கிளை தனக்கென உருவாக்கியுள்ளார். இதன் மூலம் வெறும் ரூ.1 செலவில் 15 கி.மீ., தொலைவில் உள்ள பள்ளிக்குச் சென்று வருவதாக கூறுகிறார். தினமும் தனது பள்ளிக்குச் செல்ல 45 நிமிடங்களுக்கு மேல் ஆவதாக கூறிய மாணவர், இந்த சைக்கிள் மூலம் தற்போது 15 நிமிடங்களில் பள்ளிக்குச் சென்றடைவதாக கூறியுள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி