ஆட்டோவை இடித்து தள்ளிய கார்.. பதறவைக்கும் வீடியோ

59பார்த்தது
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே காட்டாக்கடை பகுதி சாலையில் சொகுசு கார் ஒன்று அதிவேகமாக சென்றது. அப்போது, முன்னால் சென்ற ஆட்டோ மீது வேகமாக மோதியது. இதில், அந்த ஆட்டோ சாலையோரம் உள்ள சுவரில் மோதி நின்றது. இந்த கோர விபத்தில் ஆட்டோ ஓட்டுநருக்கு படுகாயம் ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது. இதுகுறித்த சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி