1921-ம் ஆண்டு காந்தி மதுரைக்கு வருகை தந்தார் அப்போது விவசாயிகள் பலரும் மேலாடை உடுத்தாமல் இருந்தனர். இது குறித்து காந்தி கேட்ட பொழுது, தாங்கள் கூலி விவசாயிகள் என்றும், உடை வாங்கும் அளவிற்கு பொருளாதார வசதி இல்லை என்றும் கூறினர். இது காந்தியின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் தானும் மேலாடை அணியப் போவதில்லை என்கிற உறுதி மொழி எடுத்தார். அதற்கு முன்பு வரை தலைப்பாகையுடன் முழு கதர் ஆடை அணிந்து வந்த அவர், அரையாடைக்கு மாறினார்.