வயது வித்தியாசமின்றி பலருக்கும் சூயிங்கம் மெல்வது விருப்பமான ஒன்று. பொதுவாக ஒரு சூயிங்கத்தை 2 மணி நேரம் வரை மெல்லலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். தினமும் சூயிங்கம் சாப்பிட்டாலோ, அல்லது நீண்ட நேரம் மென்று கொண்டிருந்தாலோ, 'டெம்போரோமண்டிபுலர் டிஸ்ஆர்டர்' (Temporomandibular Disorder) என்கிற பிரச்சனை ஏற்பட்டு அதன் விளைவாக தலைவலி வரலாம். சூயிங்கத்தை மெல்வதால் உமிழ்நீர் அதிகம் சுரக்கும்.