தேசிய மாணவர் படை சி சான்றிதழ் தேர்வு

70பார்த்தது
தேசிய மாணவர் படை சி சான்றிதழ் தேர்வு
கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் தேசிய மாணவர் படை சி சான்றிதழ் தேர்வு நடைபெறுகிறது.

கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி தன்னாட்சியில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வான சி சான்றிதழ் தேர்வு 17. 2. 2024 அன்று செய்முறைத் தேர்வும், 18. 02. 2024 அன்று எழுத்துத் தேர்வுமாக நடைபெறுகின்றது. இத்தேர்வானது 2வது தமிழ்நாடு பெட்டாலியன் என். சி. சி காமாண்டிங் அதிகாரி கர்னல் அருண்குமார் தலைமையில் நடைபெறுகிறது. இதில் 8வது தமிழ்நாடு பெட்டாலியனிலுள்ள தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களை சார்ந்த 13 கல்லூரிகளிலிருந்து 282 மாணவ மாணவிகளும் மற்றும் தஞ்சாவூரிலுள்ள 34வது தமிழ்நாடு பெட்டாலியன் என். சி. சி-ஐ சார்ந்த 70 மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர். இத்தேர்விற்கான ஏற்பாட்டினை கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் அ. மாதவி அவர்களின் அனுமதியுடன் தேசிய மாணவர் படை அதிகாரி லெப்டினன்ட் முனைவர் அ. எட்வர்ட் சாமுவேல் செய்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி