90-வது ரஞ்சிக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நாக்பூரில் உள்ள விதர்பா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் விதர்பா மற்றும் கேரளா அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் விதர்பா 379 ரன்னும், கேரளா 342 ரன்னும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய விதர்பா 375 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற விதர்பா அணி சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது. இந்த அணிக்கு ஊக்கத் தொகையாக ரூ.3 கோடி வழங்கப்பட்டுள்ளது.