தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாதவிடாய் மேலாண்மை மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி தலைமை தாங்கினார். இதில் வட்டார வள பயிற்றுனர் மல்லிகா, வெற்றிச்செல்வி உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாணவிகளிடம் தன் சுத்தம், சுகாதாரம் மற்றும் சத்தான உணவு குறித்தும், மாதவிடாய் காலங்களில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும், உடல் நிலையை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்தும், பெண்களுக்கு எதிரான பிரச்சினைகள், அதனை எவ்வாறு எதிர்கொள்வது, தற்காத்துக் கொள்வது குறித்தும் எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்பட ஊரக வாழ்வாதார இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்