பொதுமக்கள், வணிகர்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கும் மின் கட்டண உயர்வை கண்டித்தும், மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தியும், ஒன்றிய அரசின் மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையை கண்டித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை ஒன்றியம் சார்பில், வல்லம் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றியச் செயலாளர் டி. சண்முகவேலு தலைமை வகித்தார். சிபிஎம் தஞ்சாவூர் ஒன்றியச் செயலாளர் கே. அபிமன்னன் துவக்க உரையாற்றினார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். வாசு நிறைவுறையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் பி. எம். இளங்கோவன், பெண் விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்ட அமைப்பாளர் சி. சரிதா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் கே. சௌந்தரராஜன், விதொச ஒன்றியத் தலைவர் கே. கர்ணன், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் எஸ். கோவிந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.