கரந்தை: திராவிட கூட்டுறவு வங்கிக்கு புதிய கட்டிடம் கேட்டு மனு

84பார்த்தது
கரந்தை:  திராவிட கூட்டுறவு வங்கிக்கு புதிய கட்டிடம் கேட்டு மனு
கரந்தையில் உள்ள திராவிட கூட்டுறவு வங்கிக்கு புதிய கட்டிடம் கட்டித் தரக் கோரி முன்னாள் மாவட்ட தலைவர் ராகவேந்திரதாசன், தஞ்சாவூர் ஆட்சியர் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் முதல்வரின் தனிப் பிரிவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, தஞ்சாவூர் கரந்தையில் உள்ள திராவிட கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டு 115 ஆண்டுகளாக பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த வங்கிக்கு கட்டிடம் கட்ட புதிதாக காலி இடம் 15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டது. தற்போது அந்த இடம் வாகன நிறுத்துமிடமாக உள்ளது. ஆனால் புதிய கட்டிடம் கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தமிழக முதலமைச்சர் சிறப்பு கவனம் செலுத்தி கரந்தை திராவிட கூட்டுறவு வங்கிக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி