மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாளினையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் கா. அண்ணாதுரை செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் செய்தி மக்கள் தொடர்புத் துறை கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டபத்தில், அவரது நினைவு நாளினையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் கா. அண்ணாதுரை, வருவாய் கோட்டாட்சியர் கு.சு.ஜெயஸ்ரீ, பட்டுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் சண்முகப்பிரியா ஆகியோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.