பட்டுக்கோட்டையில் தேமுதிக தலைவர்
விஜயகாந்த் மறைவையொட்டி அனைத்துக் கட்சிகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடைபெற்றது. அமைதிப்பேரணி நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே ஞாயிற்றுக்கிழமை தேமுதிக நிறுவனத் தலைவர்
விஜயகாந்த் உருவப்படத்திற்கு அனைத்து கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னதாக பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட அமைதிபேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே அமைக்கப்பட்டிருந்த
விஜயகாந்த் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். பேரணியில் சட்டப்பேரவை உறுப்பினர் அண்ணாதுரை, நகர்மன்றத் தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார் உள்ளிட்ட அனைத்து கட்சிப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.