கேரளா: பாலக்காடு கல்லடிக்கோட்டைச் சேர்ந்த இளம்பெண் மரணத்தில் கணவரையும், கள்ளக்காதலியையும் போலீசார் கைது செய்தனர். ரன்ஸியா என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கணவர் ஷபீக், காதலி ஜம்சினாவை கைது செய்தனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வாடகை வீட்டில் ரன்ஸியா தூக்கில் தொங்கினார். கணவர் அடித்து கொடுமைப் படுத்தியதாலும், வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாலும் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக, ரன்ஸியாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்திருந்தனர்.