கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைகழகத்தில் சர்வதேச கருத்தரங்கம்

61பார்த்தது
கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழகம், சீனிவாச ராமானுஜன் மையத்தில் கணிப்பொறி அறிவியல் துறை சார்பில் பாதுகாப்பான கணிணி மற்றும் அறிவார்ந்த தொழில்நுட்பங்கள் தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் மைய புலத்தலைவர் முனைவர் இராமசாமி தலைமையில் நடைப்பெற்றது. இணை புலதலைவர் முனைவர் அல்லிரானி துவக்கவுரை ஆற்றினார். கருத்தரங்கை இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் விஞ்ஞானி ஜெயபிரதா கணேஷ் துவக்கி வைத்து பாதுகாப்பு பயன்பாடுகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்கள் என்ற தலைப்பில் சிறப்புறை ஆற்றினார். இக்கருத்தரங்கில் சென்னை இந்திய தொழில்நுட்ப கழக பேராசிரியர் சந்திரசேகர், அயர்லாந்து கால்வே பல்கலைகழக பேராசிரியர் பாரதிராஜா அசோக் சக்ரவர்த்தி, டில்லி இந்திய தொழில்நுட்ப கழக பேராசிரியர் இரவிபாபு முலவிசாலா ஆகியோர் உரையாற்றினார்கள். இக்கருத்தரங்கில் தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, உத்திரபிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களிலிருந்து 254 மாணவ மாணவியர்கள் கலந்துகொணடு 93 ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்..

தொடர்புடைய செய்தி