பாஜக வேட்பாளர் மாரடைப்பால் மரணம்

48644பார்த்தது
பாஜக வேட்பாளர் மாரடைப்பால் மரணம்
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த பாஜக மக்களவை வேட்பாளர் குன்வார் சர்வேஷ் சிங் (71) நேற்று காலமானார். குன்வார் சர்வேஷ் சிங்குக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், அவரது குடும்பத்தினர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று மாலை 6.30 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு பாஜக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு மொராதாபாத் தொகுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி