தக்காளி விலை சரிவு: கிலோ ரூ.20-க்கு விற்பனை

53பார்த்தது
தக்காளி விலை சரிவு: கிலோ ரூ.20-க்கு விற்பனை
சேலம் மாநகரில் உள்ள உழவர் சந்தைகளுக்கு மேச்சேரி, ஓமலூர் பகுதிகளில் இருந்தும், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் தக்காளிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது உழவர் சந்தைகளுக்கு தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தக்காளி விலை குறைந்துள்ளது.

அதாவது, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.25 முதல் ரூ.30 வரைக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரத்து அதிகரிப்பால் தக்காளி ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தக்காளி விற்பனை செய்யும் விவசாயிகளும், வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக மழைக்காலங்களில் ஒரு கிலோ ரூ.200 வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது விலை வீழ்ச்சி அடைந்து குறைந்த விலையில் தக்காளி விற்பதால் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி