சர்வீஸ் சாலை அமைத்து தரக்கோரி கிராம மக்கள் மறியல் போராட்டம்

63பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மேல செம்மங்குடி ஊராட்சி, கருப்பூர்  கிராம மக்களுக்கு சர்வீஸ் சாலை வசதி கேட்டு கருப்பூர் கிராம மக்கள் பொன்மான்மேய்ந்த நல்லூர் பகுதியில் தஞ்சை - விக்ரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த் துறையினர், பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐஸ்வர்யா, மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்ட குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கருப்பூர் கிராம மக்கள் விக்ரவாண்டி, தஞ்சை தேசிய நெடுஞ்சாலையோரம் சர்வீஸ் சாலை அமைத்து தரவேண்டும் என தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த நெடுஞ்சாலைத்துறையினர் சர்வீஸ் சாலை அமைத்துதருகிரோம் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மறியல் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. மறியல் போராட்டம் காரணமாக தஞ்சை விக்ரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சிறிதுநேரம் சாலை பணிகள்  பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி