டெல்லியில் சந்தீப் என்ற காவலர் நேற்று (செப்.29) இரவு சாதாரண உடையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக கார் ஒன்று வந்துள்ளது. அதனை மடக்கிப் பிடித்த சந்தீப் மெதுவாகப்போக சொல்லி எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர், சந்தீப்பை காரால் இடித்து சென்றுள்ளார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.