தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான பாபநாசம் - அரியலூர் இடையே நேரடி பேருந்து போக்குவரத்து சேவை துவக்க வேண்டும் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர்
மு. க. ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வழிக்காட்டுதலின் படியும் பாபநாசம் பேருந்து நிலையத்திலிருந்து அரியலூர் ரயில் நிலையம் வரை செல்லும் அரசுப் பேருந்து சேவை துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் சு. கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி கபிலன், பாபநாசம் ஒன்றிய குழுத் தலைவர் சுமதி கண்ணதாசன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் மகேந்திர குமார், கும்பகோணம் மண்டல பொது மேலாளர் இளங்கோவன், துணை மேலாளர் செந்தில்குமார், கிளை மேலாளர் சிவமயில்வேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாபநாசத்தில் 7.35 மணிக்கு பாபநாசம் தொகுதி, சட்டமன்ற உறுப்பினர் முனைவர். எம். எச். ஜவாஹிருல்லா அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.