மெலட்டூரில் 500-ஆண்டுகள் பழைமையான பாகவதமேளா நாடகம்

60பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூரில் பாகவதமேளா என்கிற தெய்வீக நாட்டிய நாடகக் கலைவிழா 500-ஆண்டுக்கும்  மேலாக பாரம்பரியம் மாறாமல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. தெலுங்கு மொழியில் படைக்கப்பட்ட இந்த நாட்டிய நாடகம் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. விழாவில் பிரகலாதா சரித்திரம், ஹரிசந்திரா, வள்ளிதிருமணம்  போன்ற நாட்டிய நாடகங்கள் நடைபெற்று வரும்  நிலையில், இரவு முழுவதும் ருக்மணி கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. தினமும் இரவு துவங்கும் நாடகங்கள் அதிகாலை வரை நடைபெறும். இந்த நாடகங்களில் ஆண்களே, பெண்கள் வேடம் தரித்து நடிப்பர்.  
இந்த நாடக நடிகர்கள் தொழில்முறை நாடகக் கலைஞர்கள் அல்ல. இவர்கள் அனைவரும் வங்கி, தனியார் நிறுவனம், சாப்ட்வேர் கம்பெனி என பல்வேறு துறைகளில் வேலை பார்க்கும் அதிகாரிகளாக இந்தியா முழுவதும் பல இடங்களில் பணிபுரிந்து வரும் இவர்கள் மெலட்டூர் உள்ளுர் வாசிகள் ஆவர். மேலும் குடும்பம் வழிவழியாக தந்தை, மகன் என்று தொடர்ந்து நடித்து இந்த நாடகங்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்கின்றனர்.
தெய்வீகம், இசை, நாட்டிய மரபுகள் நிறைந்த பாகவதமேளா பழமை மாறாமல் ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமாக மெலட்டூரில் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாடக நிகழ்ச்சியை திரளானோர்  கண்டு ரசித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி