ஒரத்தநாடு - Orathanadu

ஊரணிபுரம்: குடிநீர் தொட்டி அருகே சாக்கடை நீர், தொற்று நோய் பரவும் அபாயம்

ஊரணிபுரம்: குடிநீர் தொட்டி அருகே சாக்கடை நீர், தொற்று நோய் பரவும் அபாயம்

திருவோணம் அருகே உள்ள ஊரணிபுரம் சந்தைப்பேட்டையில் குடிநீர் தொட்டி அருகே மழைநீர் சாக்கடையாக தேங்கி இருப்பதால் தொற்று நோய் பரவும் அபாய நிலையில் உள்ளது. ஊரணிபுரம் கடைத்தெருவில் மீன் இறைச்சி கழிவுகள், காய்கறி கழிவுகள், குப்பைகள், இறைச்சி அனைத்து கழிவுகளையும் குடிநீர் தொட்டி அருகே கொட்டி கிடக்கின்றன. இந்நிலையில் கிடக்கும் கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உருவாகி இப்பகுதியில் இருக்கும் குழந்தைகள் மற்றும் பொது மக்களை கடிப்பதால் நோய் தொற்று பரவி வைரஸ் காய்ச்சலில் பாதிக்கப்பட்டு வருவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் இப்பகுதியில் அதிக அளவில் சாக்கடை நீர் தேங்கி இருக்கும் குளமாக மாறி வருகின்றன. எனவே இப்பகுதி மக்கள் தொற்றுநோயிலிருந்து காப்பாற்ற கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా