தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதற்கு அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, போதையில் வாகனம் இயக்குவது போன்றவை முக்கிய காரணமாக இருந்தாலும் கவனக்குறைவும் ஒரு காரணமாக உள்ளது. நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இன்று (நவ. 27) காலை சிறுவன் ஒருவன் சாலையை கடக்கும் போது இரண்டு பக்கமும் பார்க்காமல் திடீரென ஓடினான். இதன்போது அவ்வழியாக பைக்கில் வந்த நபர் பிரேக் போட்டதில் கீழே விழுந்து காயமடைந்தார்.