தென் அமெரிக்க நாடான பெருவில் உள்ள ஐசி பள்ளத்தாக்கில் ஆய்வாளர்கள் 13 ராட்சத தண்டு வட எலும்புகளையும், 4 நெஞ்செலும்புகளையும், ஓர் இடுப்பு எலும்புகளையும் கண்டறிந்தனர். இவை 3.9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு வகை திமிங்கலங்களுடையது என கணித்துள்ளனர். இதற்கு 'பெருசிடஸ் கொலோசஸ்' என பெயரிட்டுள்ளனர். இந்த வகை திமிங்கலங்கள் 65.6 அடி நீளம் வளரக் கூடியதாகவும், 340 டன் எடை கொண்டவையாக இருந்திருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.