பிரதமரின் ’விஸ்வகர்மா’ திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது என மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "சாதி அடிப்படையிலான தொழில்முறையை வலுப்படுத்தும் என்பதால் இதை செயல்படுத்த முடியாது. சமூக நீதி அடிப்படையில் கைவினைஞர்களுக்கு அதிகாரம் தரும் வகையில் தமிழ்நாட்டுக்கு என விரிவான திட்டம் உருவாக்க முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.